LATEST NEWS
“நாங்க என்ன தக்காளி தொக்கா..?” செந்தில் பாலாஜிக்கு ஒரு நியாயம்… அன்பில் மகேஸுக்கு ஒரு நியாயமா..? கொதித்தெழுந்த அன்பில் படை..!!
அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது திமுக காட்டிய தீவிரமான எதிர்வினையுடன் ஒப்பிடுகையில், அன்பில் மகேஸ் விஷயத்தில் அளிக்கப்பட்ட எதிர்வினை மிகக் குறைவாகவே உள்ளது. எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் அவர் சுமார் 4 மணி நேரம் இருந்தபோதிலும், சென்னையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் கூட நேரில் வரவில்லை. அதன்பின்னர், அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகே, சேகர்பாபு மற்றும் கலாநிதி வீராசாமி ஆகியோர் அங்கு வந்து அவரைப் பார்த்தனர்.
அதேவேளையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்தும் இந்த விவகாரத்தில் வழக்கமான “அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை” என்ற ஒரு சடங்கு ரீதியான அறிக்கை மட்டுமே வெளிவந்திருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
