VIDEOS
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராமின் வீட்டை பார்த்துள்ளீர்களா?…. அவரே வெளியிட்ட வீடியோ (உள்ளே)….!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 60 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிய நிலையில் தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் என கமல்ஹாசன் அறிவித்திருந்த நிலையில் சனிக்கிழமை போட்டியாளர் ராம் வெளியேற அவரைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஆயிஷா வெளியேறினார்.
இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நன்றாக விளையாடிய ராம் திடீரென வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது பிக் பாஸில் இருந்து வெளியேறியவுடன் ராம் வீட்டிற்கு சென்றதும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. அவரின் குடும்பத்தினர் அவரை மகிழ்ச்சியாக வரவேற்ற நிலையில் அந்த வீடியோவை ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட தற்போது அது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
