‘சூப்பர் சிங்கர் சீசன் 9’ போட்டியாளர் பிரியா ஜெர்சனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சூப்பர் சிங்கர் சீசன் 9’ போட்டியாளர் பிரியா ஜெர்சனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…

Published

on

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்நிகழ்ச்சியானது சிறுவர்கள் முதல் பெரியவர் வரை மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர்.  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது தமிழ் சினிமாவில் பாடகராக கலக்கி கொண்டிருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் ஏராளம். தற்போது ‘சூப்பர் சிங்கர் சீசன் 9’ நடைபெற்று வருகிறது. இந்த சீசனில்  பென்னி தயாள், அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன் , பி.உன்னிகிருஷ்ணன் போன்றோர்  நடுவராக உள்ளனர். இந்நிகழ்ச்சியை  மா கா பா மற்றும்  பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யாழினி, கார்த்திக், தினேஷ் குமார், அனந்த கோபன், லாவண்யா, கௌரி சங்கர், சினேகா பத்மநாபன், பிரியா ஜெர்சன், அருணா சிவயா, பூஜா வெங்கட்ராமன் போன்ற பல போட்டியாளர்கள் இப் போட்டியில் பங்கு பெற்றனர்.

இப்போட்டியில் நன்றாக பாடி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் பாடகி பிரியா ஜெர்சன். இவர் தற்போது ‘சூப்பர் சிங்கர் சீசன் 9’  இறுதி போட்டியாளர்கள் ஐவரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.தாய் ஜெயா ஜெர்சன். டிரினிட்டி கல்லூரி லண்டனில் பட்ட படிப்பை  முடித்தார்.சிறுவயதிலிருந்தே பாடுவதில் மிகவும்  ஆர்வமாக இருந்தார். அதனால்  கே.எம்.உதயனிடம் கிளாசிக்கல் இசையையும், விஜய் சுர்சைனிடம் ஹிந்துஸ்தானி இசையையும் கற்றுக்கொண்டார்.

இவர் சோசியல்  மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 112K followers உள்ளனர்.இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது .

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in