ஓட்டுநர் கொடுத்த பகீர் துப்பு: யார் இந்த சண்முகப்பிரியா..? அன்பில் மகேஷ் ஊழல் வழக்கை உலுக்கும் சிசிபி அதிரடி வேட்டை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஓட்டுநர் கொடுத்த பகீர் துப்பு: யார் இந்த சண்முகப்பிரியா..? அன்பில் மகேஷ் ஊழல் வழக்கை உலுக்கும் சிசிபி அதிரடி வேட்டை..!!

Published

on

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான ரூ.100 கோடி லஞ்சப் புகார் வழக்கில், கைதான உமாசங்கர் என்ற ஓட்டுநர் கொடுத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பெண் தொழிலதிபர் சண்முகபிரியா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கிய வழக்கில் பிடி அரசகுமாரனிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, கடந்த 26ஆம் தேதி அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மெகா ஊழல் வழக்கில் முத்துக்குமார் என்பவர் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ‘Aphrodite Drapes’ என்ற துணிக்கடை நடத்தி வரும் சண்முகபிரியாவை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதலே இவருக்குச் சொந்தமான நீலாங்கரை மற்றும் பெருங்குடி இல்லங்கள் உட்பட நான்கு இடங்களில் போலீசார் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததாகத் தற்போது தெரியவந்துள்ளது.

Advertisement

தனியார் பள்ளிகளிடம் இருந்து திரட்டப்பட்ட லஞ்சப் பணம், பல தவணைகளாக திமுகவிற்குச் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பின்னணியில் சண்முகபிரியாவின் தொடர்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது அவரது பெருங்குடி ராம்ஸ் ராக ஸ்ரீ விலாஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்று வரும் இந்தச் சோதனையின் மூலம் முக்கிய ஆதாரங்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவரது காவல் தொடர்பான வழக்கை நாளை விசாரிக்கவுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in