LATEST NEWS
56 வயதில் இப்படியா?…. இளம் நடிகையை காதல் வலையில் சிக்க வைத்த சல்மான் கான்…. அந்த நடிகை யார் தெரியுமா….????
தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. முகமூடி படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தளபதி விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஹிந்தியில் புதிதாக உருவாகி வரும் திரைப்படத்தில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்து வருகின்றார். இந்நிலையில் படப்பிடிப்பின் போது சல்மான் கானுக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் இருவரும் சமீபத்தில் ஒன்றாக அதிக நேரம் செலவழித்ததாகவும் சல்மான் கான் தயாரிப்பு நிறுவனத்தில் இன்னும் இரண்டு திரைப்படங்களில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனது 56 வயதாகும் நடிகர் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வரும் நிலையில் தற்போது காதல் வலையில் சிக்கி இருப்பதாக இணையத்தில் தீயாய் செய்தி பரவி வருகிறது.
