LATEST NEWS
நடிகர் ராகவா லாரன்ஸ் மகளா இது?…. ஆள் அடையாளம் தெரியாம இப்படி வளர்ந்துட்டாங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது சந்திரமுகி 2 படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ரசிகர்களை கவர்ந்து உள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுவரை ராகவா லாரன்ஸ் எந்த ஒரு படத்திலும் மாஸ்டர் சிக்ஸ் பேக் போல உடம்பை வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து நடித்ததே இல்லை.
ஆனால் தற்போது முதன்முறையாக இயக்குனர் வாசி இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்காக இப்படி மாறி உள்ளார். சினிமாவில் பிஸியாவா இருக்கும் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நல உதவிகளை செய்து வருகிறார். அவர்களை பாதுகாத்து வளர்ப்பது, படிக்க வைப்பது போன்ற சேவைகளை லாரன்ஸ் அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார். இவரால் ஏராளமான குழந்தைகள் இன்று சமூகத்தில் நடமாடி கொண்டிருக்கின்றன.
இவ்வாறு சினிமாவிலும் சமூகத்திலும் பிசியாக இருந்து வரும் இவர் லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ராகவி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் ராகவா லாரன்ஸின் மகள் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் பலரும் இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
