VIDEOS
தனது பிறந்தநாளில் KPY பாலா செய்த செயல்… பலரையும் வியக்க வைத்த வீடியோ… வாழ்த்தும் ரசிகர்கள்..!!
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக பங்கேற்ற பலரும் இன்று மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர். அப்படி சின்ன திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் KPY பாலா. இவர் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் வெட்டுக்கிளி என்று அழைக்கப்படும் இவர் காமெடி செய்து மற்றவர்கள் கொடுக்கும் கவுண்டருக்கு உடனடியாக பதில் கவுண்டர் கொடுப்பதில் வல்லவர். தற்போது இவர் பல திரைப்படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலா தன்னுடைய சொந்த செலவில் சிறுவர்கள் படிக்க பண உதவி செய்வது மற்றும் பெரியவர்களுக்கு உதவி செய்வது என பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி பாலா தன்னுடைய பிறந்தநாளை அண்மையில் கொண்டாடிய நிலையில் அன்று தன்னுடைய ஐந்து ஆண்டுகால கனவாக இருந்த முதியோர் இல்லத்திற்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர பாலாவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
