VIDEOS
“என்னால சொல்ல முடியல”… கண் கலங்கியபடி வீடியோ வெளியிட்ட துல்கர் சல்மான்… ஷாக்கான ரசிகர்கள்..!!
மலையாள சினிமா திரை உலகில் இன்றும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் மம்மூட்டி. இவரின் ஒரே மகன் தான் நடிகர் துல்கர் சல்மான். தனது அணுகுமுறை மற்றும் எதார்த்தமான பேச்சு ரசிகர்களை தாண்டி பலரையும் கவர்ந்துள்ளது. இவர் தமிழ் சினிமாவில் வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவிற்கு வசூல் பெற விட்டாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி படத்தை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முன்னணி நடிகராக திகழ்ந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தற்போது இவர் கிங் ஆஃப் கோதா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் துல்கர் சல்மான் இன்ஸ்டால் கண்கலங்கியபடி ஒரு வீடியோவை பதிவிட்டு அதனை சற்று நேரத்தில் நீக்கிவிட்டார். அதில் நான் தூங்கி ரொம்ப நாளாச்சு. நான் முதல் முறையாக சந்தித்த விஷயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது என்னுடைய மனதில் இருந்து நீங்கவில்லை. நான் அனைத்தையும் சொல்ல நினைக்கிறேன் ஆனால் சொல்ல எனக்கு அனுமதி இல்லை என்று அந்த வீடியோவில் அவர் கண் கலங்கி பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
What happened to #DulquerSalmaan 🥺🥺. He posted and deleted it later. Is everything alright to him ?. #KingOfKotha pic.twitter.com/PyGnrwnorw
— DON BOY (@preethamtweets_) July 2, 2023
