VIDEOS
விஜய்யின் லியோ பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய அர்ச்சனாவின் மகள் சாரா… வைரலாகும் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் திரிஷா, அர்ஜுன் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இதனிடையே சமீபத்தில் இந்த திரைப்படத்திலிருந்து முதல் பாடல் நா ரெடி தான் வரவா வெளியிடப்பட்டது.
இந்தப் பாடலுக்கு நட்சத்திரங்கள் பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி விஜயின் லியோ பட நா ரெடி பாடலுக்கு தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாரா நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
