என்னங்க இவ்வளவு ஸ்பீடா இருக்கீங்க…அறிவிப்பு வந்த சில நிமிடங்களில் மந்திரி பதவி…ரசிகர்களிடம் கருத்து கேட்ட லாரன்ஸ்! கமெண்ட் பாக்ஸில் குவியும் ஆதரவும் எதிர்ப்பும்… தற்போதைய ஹாட் டாபிக்…! – cinefeeds
Connect with us

CINEMA

என்னங்க இவ்வளவு ஸ்பீடா இருக்கீங்க…அறிவிப்பு வந்த சில நிமிடங்களில் மந்திரி பதவி…ரசிகர்களிடம் கருத்து கேட்ட லாரன்ஸ்! கமெண்ட் பாக்ஸில் குவியும் ஆதரவும் எதிர்ப்பும்… தற்போதைய ஹாட் டாபிக்…!

Published

on

தமிழக அரசியல் வட்டாரத்தில் தவெக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் லாரன்ஸ் களம் காணப்போவதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று காலை அவர் வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ ஒட்டுமொத்த அரசியல் மற்றும் சினிமா உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.அந்த வீடியோவில் தனது அரசியல் ஆசையின் பின்னணி குறித்து ராகவா லாரன்ஸ் உருக்கமாகப் பேசியுள்ளார். ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தில் உணவளித்ததே தனது அரசியல் தொடக்கமாக அமைந்தது என்றும், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வரப்போவதில்லை என்று அறிவித்தபோது தான் நிலைகுலைந்து போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 தான் அரசியலுக்கு வருவதைத் தனது தாய் கடுமையாக எதிர்த்ததால் அந்த முடிவைத் தள்ளிப்போட்டதாகக் கூறிய லாரன்ஸ், தற்போது தனது நண்பன் விஜய் கட்சி தொடங்கி, தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக நெகிழ்ந்துள்ளார். விஜய் ஏற்படுத்திய இந்த அரசியல் மாற்றம் தன் தாயின் மனதை மாற்றியதாகவும், தற்போது அவர் அரசியலுக்கு வரப் பச்சைக் கொடி காட்டிவிட்டதாகவும் குறிப்பிட்ட லாரன்ஸ், “அம்மா ஓகே சொல்லிவிட்டார், ரசிகர்களாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” எனத் தனது அரசியல் வருகை குறித்து நெட்டிசன்களிடம் கருத்து கேட்டுள்ளார்.

Advertisement

லாரன்ஸின் இந்தத் திடீர் அரசியல் அறிவிப்பு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களது கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளனர். லாரன்ஸ் அரசியலுக்கு வருவதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அவரது காஞ்சனா படப் பாணியைக் கிண்டல் செய்யும் விதமாக, ‘ராகவா லாரன்ஸ்.. ஆவிகள் மற்றும் பேய், பிசாசு நலத்துறை அமைச்சர்’ என்று அச்சிடப்பட்ட போஸ்டர் எடிட்டிங் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “என்னங்க அரசியல் அறிவிப்பு வந்த உடனே இவ்வளவு ஸ்பீடாக மந்திரி பதவியே கொடுத்துட்டீங்க!” என நகைச்சுவையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருபுறம் கடுமையான விமர்சனங்களும், மறுபுறம் வாழ்த்துகளும் குவிந்து வரும் சூழலில், ரசிகர்களின் கமெண்டுகளைப் பார்த்து லாரன்ஸ் எடுக்கப்போகும் அந்த இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in