விஜய் அந்த பிம்பத்தையே உடைச்சுட்டாரு…அம்மாவ மீறி வந்திருந்தா உருப்படியாயிருக்க மாட்டேன்…” ரஜினி முதல் விஜய் வரை… ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அதிரடி வீடியோ…பச்சைக் கொடி காட்டிய தளபதி விஜய்…! – cinefeeds
Connect with us

CINEMA

விஜய் அந்த பிம்பத்தையே உடைச்சுட்டாரு…அம்மாவ மீறி வந்திருந்தா உருப்படியாயிருக்க மாட்டேன்…” ரஜினி முதல் விஜய் வரை… ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அதிரடி வீடியோ…பச்சைக் கொடி காட்டிய தளபதி விஜய்…!

Published

on

தமிழக அரசியலில் தற்போது ‘திருச்சி கிழக்கு’ சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தான் ஹாட் டாபிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாக கடந்த சில நாட்களாகப் பரவி வந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இன்று காலை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் 10 நிமிட உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள லாரன்ஸ், தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும், தனது தாயார் விதித்த தடைகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

அந்த வீடியோவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த போதே தானும் அரசியலுக்கு வரத் தயாரானதாக லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது தாயார் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “அரசியல் ஒரு சாக்கடை, அங்கே ஜாதி, மதம், பணம் கொடுத்து வாக்கு வாங்குவது என எல்லாமே இருக்கிறது; அந்த சாக்கடைக்குள் நீ போக வேண்டாம்” எனத் தடுத்ததோடு, ரஜினியையே அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொல்லச் சொன்னதாக லாரன்ஸ் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். அம்மாவின் பேச்சை மீற விரும்பாததாலேயே அப்போது தான் அரசியலுக்கு வரவில்லை என்றும், பின்னர் ரஜினியும் தனது அரசியல் முடிவைக் கைவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதற்கிடையில், தனது நண்பர் விஜய் அரசியலுக்கு வந்து, “பணம் இருந்தால்தான் அரசியலில் ஜெயிக்க முடியும்” என்ற பிம்பத்தை ஒட்டுமொத்தமாக மாற்றிப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக லாரன்ஸ் பாராட்டியுள்ளார். விஜய்யின் இந்த அரசியல் மாற்றத்தைப் பார்த்த பிறகு, அவரது தாயாரும் லாரன்ஸ் அரசியலுக்கு வரப் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். வீடியோவின் இறுதியில், “இப்போது நீங்கள் சொல்லுங்கள், நான் அரசியலுக்கு வரட்டுமா வேண்டாமா? தவெக-வில் இணையலாமா?” என்று ரசிகர்களிடமே லாரன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளது, அவர் விரைவில் தவெக-வில் இணைந்து திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பை விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in