திருமணமா, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பா?…. ரசிகரின் கேள்விக்கு ஓப்பனாக பதில் அளித்த நடிகை யாஷிகா….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணமா, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பா?…. ரசிகரின் கேள்விக்கு ஓப்பனாக பதில் அளித்த நடிகை யாஷிகா….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் துருவங்கள் 16 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் தொடர்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால் அந்நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இன்றைய இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவர் அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார்.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோ செய்ய தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.  இதனிடையே ரசிகர்களின் கேள்விக்கு சமீபத்தில் பதில் சொன்ன யாஷிகா டேட்டிங் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார். ஒரே வயதுடைய நபருடன் டேட்டிங் செல்ல மாட்டேன் எனவும் அவரைவிட வயது அதிகமானவர்தான் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

அதுமட்டுமல்லாமல் திருமணமா அல்லது லிவ்விங் இன் ரிலேஷன்ஷிப் என கேட்டதற்கு நான் திருமணம் செய்ய விரும்புபவருடன் லிவ் இன் &ல் இருக்க விரும்புகிறேன், திருமணத்திற்கு முன்பே அவரைப்பற்றி முழுமையாக நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் எனவும் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in