LATEST NEWS
நீங்க மிசாவையே பார்த்தவங்களா இருக்கலாம்.. ஆனா எங்களுக்கு எந் பயமும் இல்ல… உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பதிலடி..!!
“எங்களுக்கு எந்தப் பயமும் கிடையாது; எங்களிடம் ஆதாரம் உள்ளது. தக்க நேரத்தில் வெளியிட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சவாலுக்குத் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். திமுக என்பது அவசரநிலை பிரகடனக் காலத்தின் “மிசா” சட்டத்தையே பார்த்த இயக்கமாக இருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட திமுகவுக்குத் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ‘தவெக’ என்றால் என்னவென்று நாங்கள் நிரூபித்துக் காண்பித்திருக்கிறோம் என்றும் அவர் அவையில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
கடந்த சில தினங்களாகச் சட்டமன்றத்தில் நீடித்து வரும் கோப்புகள் மற்றும் ஆதாரங்கள் தொடர்பான விவாதத்தில், திமுகவின் சவால்களுக்குத் தவெக அரசு அஞ்சாது என்பதை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தங்களது கைவசம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உரிய நேரத்தில் சட்டப்படியான நடவடிக்கைகள் பாயும் என்றும் அவர் எதிர்க்கட்சித் தலைவருக்குத் திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார்.
