LATEST NEWS
மருத்துவமனையில் உயிருக்கு போராடும் அம்மா…. ரகசிய திருமணம் செய்த பிக்பாஸ் நடிகை…. ரசிகர்கள் ஷாக்….!!!!
ஹிந்தியில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை ராக்கி சாவந்த். இவர் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கதறி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதாவது அவரின் அம்மா பிரைன் ட்யூமரால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் அம்மா இப்படி இருப்பதாக என்னிடம் கூறவே இல்லை என்று கோபமாக குற்றம் சாட்டு இருந்தார். இந்நிலையில் அவர் செய்துள்ள ஒரு செயல் தற்போது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது உடல்நிலை முடியாத நிலையில் அம்மா மருத்துவமனையில் இருக்கும்போது இவர் அவரின் காதலர் ஆதில் கான் துறானி என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.
