LATEST NEWS
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நயன்தாரா…. இரட்டை குழந்தைகளின் கியூட் புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா.
இவர் முதன்முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி மற்றும் அஜித்துடன் பில்லா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தற்போது இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த வருடம் ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அவர்களின் திருமண புகைப்படங்கள் ஒரு சில மட்டும் வெளியாகி உள்ளது.
விரைவில் இவர்களின் திருமண வீடியோவை நெட்ப்ளிக்ஸ் நிறுவன வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி அறிவித்த நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பிறகு வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்த நிலையில் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
தற்போது நயன் மற்றும் விக்கி தம்பதி தனது குழந்தைகளுடன் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் பல புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்கள்.
