VIDEOS
“மேடம் நீங்க வேற லெவல்”… நுனி நாக்கில் தாண்டவம் ஆடும் தமிழ்… முன்னணி செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு வெளியிட்ட வீடியோ..!!
தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பாத்திமா பாபு. செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நீண்ட காலமாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் அமைந்ததால் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.
அதன்படி 90களில் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். அதே சமயம் அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ், சூர்யா மற்றும் விஜய் உள்ளிட்ட இளம் நடிகர்களின் படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது இவர் சின்ன திரையில் கலக்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பாத்திமா பாபு தற்போது எப்படி செய்தி வாசிக்க வேண்டும் என்று தமிழில் உள்ள இலக்கண இலக்கியங்களை ஒவ்வொன்றாக விளக்கியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
