“யாருக்கு வெட்கமில்லை..? 2001-ல் பாஜக.. 2006-ல் அதிமுக.. 2019-ல் திமுக…!” வன்னியரசு போட்ட ஒரே ஒரு பதிவு.. விசிகவின் மொத்த வரலாற்றையும் வெளுத்து வாங்கிய நாதக..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யாருக்கு வெட்கமில்லை..? 2001-ல் பாஜக.. 2006-ல் அதிமுக.. 2019-ல் திமுக…!” வன்னியரசு போட்ட ஒரே ஒரு பதிவு.. விசிகவின் மொத்த வரலாற்றையும் வெளுத்து வாங்கிய நாதக..!!

Published

on

தாராபுரத்தில் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கிய கார்த்திகா கைது செய்யப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்த தலைவர்களுக்கு சீமான் நன்றி தெரிவித்தார். அதனை விமர்சித்து சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு “திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், நாம் தமிழர் மற்றும் திமுக தொண்டர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நாதகவின் முக்கிய பேச்சாளரும், இளைஞர் அணி மாநில அமைப்பாளருமான இடும்பாவனம் கார்த்திக், விசிகவின் கூட்டணி வரலாறுகளைச் சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 2001-ல் பாஜகவுடனும், 2006-ல் அதிமுக மற்றும் திமுகவுடனும் மாறி மாறி கூட்டணி வைத்தது, 2009-ல் காங்கிரஸ் மற்றும் பாமகவுடன் இணைந்தது, மேலும் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் தவெக விவகாரங்களில் விசிக எடுத்த நிலைப்பாடுகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

மேலும், “திருமா துண்டுபோட்டு வைக்காத கட்சிகளே இல்லை, தேவைப்பட்டால் ராஜபக்சேவோடும் அமித்ஷாவையும் அரவணைப்பார்” என்றும், தேர்தலுக்கு முன்பு விஜய்யைக் ‘கோழை’ என விமர்சித்துவிட்டு தற்போது அதே அமைச்சரவையில் தொடர்வதற்காக வன்னியரசு கூழைக்கும்பிடு போடுவதாகக் குறிப்பிட்டு, சமரசமற்ற அரசியல் பேசும் நாதகவைக் விமர்சிக்க அவருக்கு என்ன அருகதை இருக்கிறது என இடும்பாவனம் கார்த்திக் காட்டமாக வினவியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in