அட இவங்களா?…. பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறிய 2 பிரபல போட்டியாளர்கள்…. ஷாக்கான ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LifeStyle

அட இவங்களா?…. பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறிய 2 பிரபல போட்டியாளர்கள்…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 60 நாட்களைக் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் புதுவிதமான டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து வர போட்டியாளர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வருகிறார்கள்.

கடந்த வாரம் போட்டியாளர்களை கமல்ஹாசன் கடுமையாக எச்சரித்த நிலையில் தற்போது போட்டியாளர்கள் ஓரளவு விளையாட்டில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனிடையே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement

மறுபக்கம் இந்த வாரம் வழக்கம் போல ஒரு எலிமினேஷன் மட்டுமல்லாமல் டபுள் எலிமினேஷன் இருக்கிறது என கமல்ஹாசன் கடந்த வாரமே தெரிவித்திருந்த நிலையில் அந்த இரண்டு பேர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஆயிஷா மற்றும் ராம் இருவரும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதனை அறிந்து அவரின் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in