LATEST NEWS
கமலையே ஓவர்டேக் செய்த பொன்னியின் செல்வன்….. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?….!!!!
மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று பலத்தை எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. இந்த திரைப்படம் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகியுள்ளது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கார்த்திக், விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை படைத்துள்ளது. அதாவது கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் 15 கோடியை பொன்னியின் செல்வன் தாண்டியுள்ளது. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை குவித்த படம் பொன்னியின் செல்வன் தான்.
படத்தின் வெளிநாட்டு முன்பதிவு வசூல் மட்டும் சுமார் 1.3 பில்லியன் டாலர் அதாவது 10 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளே உலக அளவில் 50 முதல் 60 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது இந்த வருடத்தில் எந்த தமிழ் படமும் செய்யாத மிகப்பெரிய வசூல் ஆகும். கமலஹாசனின் விக்ரம் ஜூன் மாதம் வெளியான போது இந்தியாவில் 33 கோடியும், உலகம் முழுவதும் 54 கோடியும் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை பொன்னின் செல்வன் திரைப்படம் முறியடித்துள்ளது.
