பிக்பாஸ் ஷிவினை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற ரச்சிதா மகாலட்சுமி…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் ஷிவினை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற ரச்சிதா மகாலட்சுமி…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது.

இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி இறுதியாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் வென்றார்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்தான் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரட்சிதா. இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

அதிலும் குறிப்பாக இவ்வாறு சேலை கட்டும் அழகே தனி தான். இவரின் அழகை வர்ணிக்காத ரசிகர்களை கிடையாது.

இவர் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை மெதுவாக கவர்ந்தார்.

Advertisement

ஆனால் இவர் இறுதி வரை இருப்பார் என எதிர்பார்த்த நிலையில் குறிப்பிட்ட நாட்கள் வீட்டை விட்டு வெளியேறினார்.

இவரைப் போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் ஷிவின்கணேசன்.

Advertisement

திருநங்கையான இவர் தனது துடிப்பான பேச்சாளர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது ஷிவின் மற்றும் ரட்சிதா இருவரும் நெருங்கிய தோழிகளாக தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர்.

Advertisement

தற்போது இவர்கள் இருவரும் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு வேண்டுதலை நிறைவேற்றிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in