CINEMA
4 நாட்களில் வசூலில் பட்டையை கிளப்பிய ரெட்ரோ… சூர்யா காட்டுல மழை தான் போங்க..!!

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ரெட்ரோ. முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தை இயக்கியிருந்தார். பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இந்த படத்தை இசையமைத்திருந்தார். படம் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் வசூல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
கடந்த மே 1ம் தேதி இந்த படம் வெளியாகி தற்போது நான்கு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நான்கு நாட்களில் உலக அளவில் இந்த படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் உலக அளவில் 4 நாட்களில் 80 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படத்திற்கான வசூல் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.