CINEMA
ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா..??

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ரெட்ரோ. முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தை இயக்கியிருந்தார். பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இந்த படத்தை இசையமைத்திருந்தார். படம் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் வசூல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
கடந்த மே 1ம் தேதி இந்த படம் வெளியாகி தற்போது நான்கு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த படம் உலக அளவில் 4 நாட்களில் 80 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக சூர்யா 40 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளார். இதில் முக்கிய ஹீரோயினாக நடித்த பூஜா ஹெக்டே இந்த படத்தில் நடிக்க 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.