CINEMA
ரெட்ரோ படத்தின் லாபம் 10 கோடியை எடுத்து சூர்யா செய்த நல்ல விஷயம்… குவியும் பாராட்டுக்கள்..!!

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ரெட்ரோ. முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தை இயக்கியிருந்தார். பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இந்த படத்தை இசையமைத்திருந்தார். படம் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் வசூல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
படம் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் 104 கோடி வசூலை எட்டி இருப்பதாக நேற்று படக்குழு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை எடுத்து நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷனுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். இதற்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.