VIDEOS
விஜய் முன்பு ஆடிய சரத்குமார்…. வாரிசு இசை வெளியீட்டு விழா…. சன் டிவி வெளியிட்ட 3வது ப்ரோமோ…. வைரல்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்தத் திரைப்படத்தை வம்சி இயக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்க இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சரத்குமார், குஷ்பூ மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் விஜய் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சன் டிவியில் இந்த இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு ப்ரோமோ வீடியோ வெளியான நிலையில் தற்போது மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மேலும் அந்த வீடியோவில் மேடையில் பேசிய சரத்குமார், விஜய் முன்னாடி ஆடி காமிச்சிருப்பேன்,இப்போ ஒரு வாய்ப்பு கிடைத்து நானும் அப்படி இப்படி பண்ணுவேன் எனக் கூறி ஆடி காட்டுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
