நான் பென்ஸ் கார் வாங்கிட்டேனா..? திரள்நிதி காசுல ஒரு டீ கூட குடிக்கலடா… அது யார் வாங்கித்தந்தது தெரியுமா..? பென்ஸ் கார் சர்ச்சைக்கு மேடையிலேயே ஆவேசமாக பதிலடி கொடுத்த சீமான்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நான் பென்ஸ் கார் வாங்கிட்டேனா..? திரள்நிதி காசுல ஒரு டீ கூட குடிக்கலடா… அது யார் வாங்கித்தந்தது தெரியுமா..? பென்ஸ் கார் சர்ச்சைக்கு மேடையிலேயே ஆவேசமாக பதிலடி கொடுத்த சீமான்..!!

Published

on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் சொகுசு பென்ஸ் கார் ஒன்றை வாங்கியது அரசியல் வட்டாரத்திலும், சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கட்சியின் தேர்தல் நிதியான “திரள்நிதி” பணத்தை வைத்துத்தான் அவர் இந்த சொகுசு காரை வாங்கியுள்ளார் என்று எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஊடக விமர்சகர்கள் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

இந்த விமர்சனங்களுக்குப் பொதுமேடையில் காரசாரமாக பதிலளித்த சீமான், “மக்களிடம் இருந்து பெறப்பட்ட திரள்நிதி காசில் நான் ஒரு டீ கூட குடித்தது இல்லை” என ஆவேசமாக மறுத்துள்ளார். எனது நீண்டதூரப் பயணக் களைப்பைப் பார்த்த என் மருமகன், அவரது சொந்தக் காசைத் தந்து எனக்கு இந்த காரை வாங்கித் தந்தார் என்றும், வாதத்தில் தோற்பவர்கள் மட்டுமே தன் மீது இப்படிப்பட்ட அவதூறுகளை அள்ளி வீசுவதாகவும் கூறி விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in