பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிக்கிறாரா சீமான்..? எந்த படம் தெரியுமா..? இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிக்கிறாரா சீமான்..? எந்த படம் தெரியுமா..? இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே..!!

Published

on

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2012-ஆம் ஆண்டு போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்களை இயக்கினார். விக்னேஷ் சிவன் கடந்தாண்டு நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி படத்தை பிரபல லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் ஏற்கனவே கோமாளி லவ் டுடே ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர். அவருக்கு ஜோடியாக எல்.ஐ.சி படத்தில் கீர்த்தி செட்டி நடிக்கிறார்.

Advertisement

மேலும் படத்தில் சீமான், எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மிடில் கிளாஸ் மாதவன், பள்ளிக்கூடம், மாயாண்டி குடும்பத்தார் என ஏராளமான படங்களில் நடித்தவர் சீமான். இவர் நாம் தமிழர் அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.

தற்போது சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விவசாயத்தை மையமாக வைத்து இந்த படம் இயக்கப்படுகிறது. அந்த காலத்து அப்பா இந்த காலத்து மகன் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி படம் எடுக்கப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக சீமான் நடிப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in