LATEST NEWS
‘மாவீரன்’ படம் பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் … நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்… வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பின் கடந்த ஜூலை 24ஆம் தேதி வெளியான மாவீரன் திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார்.
இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியான நிலையில் இதில் அதிதி சங்கர், சரிதா, மிஸ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வசூல் சாதனை குவித்துள்ளது.
இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக சிவகார்த்திகேயன் தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘சிவா நான் மொத்தமாக என்ஜாய் பண்ணேன் ரொம்ப கிராண்ட் ஆக இருந்தது. ரொம்ப நன்றாக நடித்திருந்தீர்கள். கதை வித்தியாசமாக இருந்தது, வித்தியாச வித்தியாசமாக கதைகளை பிடிக்கிறீர்கள்’ எனக் கேட்டதாக கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து இன்று ரிலீஸாக ஜெயிலர் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்று கூறினார். மேலும் ‘தலைவா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். என்றென்றும் உங்கள் ரசிகன்.. நீங்கள் இன்னும் எங்களை என்டர்டெய்ன் செய்து கொண்டே இருக்க வேண்டும். நாங்களும் உங்களை ரசித்து கொண்டாடிக் கொண்டே இருப்போம்’ என்று கூறியிருந்தார் சிவகார்த்திகேயன். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….
View this post on Instagram