LATEST NEWS
தங்க மோதிரம் போட்டீங்களே.. உங்க காசா.? உங்க அப்பன் வீட்டு காசா..? முதல்வர் விஜய்யை வெளுத்தெடுத்த ஸ்டாலின்..!!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் தங்களை நோக்கிக் கேட்கும் அரசியல் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் மேடையில் ஆவேசமாக உரையாற்றினார்.
தனது உரையின் போது, மக்கள் நலத்திட்டங்களை வழங்குவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளைச் சாடிய அவர், “சொந்தக் காசுலயா பண்ணீங்கன்னு நம்மள பார்த்து கேட்கிறார்.. தங்க மோதிரம் போட்டீங்களே.. உங்க காசா? உங்க அப்பன் வீட்டு காசா?” என்று மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவது அரசின் கடமை என்பதை விளக்கிய அவர், இந்த ஏமாற்றுப் பேர்வழிகளுக்குத் தங்களைக் கேள்வி கேட்க எந்த தகுதியும் இல்லை என்றும் விமர்சித்தார்.
மேலும், தற்போதைய தவெக அரசை ஒரு “துயர சக்தி” என்று குறிப்பிட்ட ஸ்டாலின், இந்த ஆட்சி ஒரு ‘Dummy’ ஆட்சி என்பது இப்போது அம்பலமாகிவிட்டது என்றும் சாடினார். எனவே, மக்களின் நலனையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, வரும் இடைத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து திமுகவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மதுராந்தகம் தொகுதி பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
