LATEST NEWS
திடீரென பிக்பாஸ் போட்டியாளர்கள் முன்பு கண்கலகிய கமல்ஹாசன்…. வெளியானது இன்றைய ப்ரோமோ வீடியோ….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முதலில் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட கடந்த வாரம் 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர். ஒவ்வொரு வாரமும் புது புது டாஸ்க் கொடுத்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் நன்றாக போட்டிகளை விளையாடி வருகிறார்கள்.
இதனிடையே இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அந்த இரண்டு பேர் யார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அதன்படி நேற்று சனிக்கிழமை நிகழ்ச்சியில் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதாவது மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்ற ராம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் இன்றைக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் கமல்ஹாசன் பெற்றோர்களைப் பற்றி கூறுமாறு போட்டியாளர்களிடம் கேட்க அவர்கள் அனைவரும் தனது பெற்றோர்கள் பற்றி கூறினர். இதை தொடர்ந்து கமல்ஹாசன் பேசுகையில், பெற்றோர் பற்றி பேசுனீர்கள், இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடாது, இதனை தெளிவாக சொல்லாமலேயே நாம் அவர்களை இழந்து விடுவோம், அப்படிப்பட்ட ஒரு குழந்தை தான் நான்,உங்களை அனைவரையும் பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கிறது என கமல்ஹாசன் கண்கலங்கிய நிலையில் அதனைப் பார்த்து ஷிவினும் விம்மி விம்மிஅழுது கண்ணீர் வடித்த நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
