LATEST NEWS
இனி பொண்ணுங்கள பாத்தாலே அலறி ஓடுவான்…! ரயிலில் அத்துமீறிய வாலிபருக்கு… லிப்ஸ்டிக், வளையல் போட்டு பாடம் புகட்டிய இளம்பெண்..! வைரல் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலத்தில் பத்னேரா – அகோலா இடையே இயங்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக பெண் பயணியிடம் பாலியல் ரீதியாக அநாகரிகமாக நடந்து கொண்டு தொல்லை அளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், உடனடியாக அந்த இளைஞரைப் பிடித்துக் கண்டித்ததுடன் அவருக்குத் தர்ம அடியும் கொடுத்தனர்.
தனக்கு நேர்ந்த அநீதிக்கு மறக்க முடியாத பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்த அந்த இளம்பெண், தன்னிடம் இருந்த ஒப்பனைப் பொருட்களை எடுத்து அந்த இளைஞரின் முகத்தில் பூசினார். மேலும் அவரது உதடுகளில் லிப்ஸ்டிக் பூசி, கைகளில் வளையல்களையும் அணிவித்தார். ரயிலில் நடந்த இந்தச் சம்பவத்தை அங்கிருந்த பயணிகள் சிலர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெண்களிடம் அத்துமீறுபவர்களுக்குப் பொதுமக்கள் முன்னிலையில் இப்படிப்பட்ட கண்டனம் அவசியம் என்று பலர் ஆதரவு தெரிவித்தனர். அதேவேளையில், சட்டத்தைக் கையிலெடுத்துத் தண்டிப்பதைத் தவிர்த்து, காவல் துறை மற்றும் நீதிமன்றத்தின் வழியே உரிய விசாரணை நடத்தித் தண்டனை வழங்குவதே சரியான நடைமுறை என்று சிலர் மாறுபட்ட கருத்துகளையும் முன்வைத்துள்ளனர்.
