விஜயின் ‘தவெக’ கொடி நிறத்தில் அரசுப் பேருந்துகளா..? இணையத்தில் கிளம்பிய புதிய விவாதம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜயின் ‘தவெக’ கொடி நிறத்தில் அரசுப் பேருந்துகளா..? இணையத்தில் கிளம்பிய புதிய விவாதம்..!!

Published

on

தமிழக அரசின் சார்பாக புதிதாகத் தயாரிக்கப்பட்டு வரும் புதிய மினி பேருந்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறங்களான மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த வண்ணங்களில் தயாராகி வருகின்றன. இந்த நிற மாற்றம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் தற்போது வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு மஞ்சள் நிறமும், ஜெயலலிதா அவர்களுக்கு பச்சை நிறமும் பிடித்த நிறங்களாக இருந்தன. அதுபோல, தவெக தலைவர் விஜய்க்கு பிடித்த மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த வண்ணங்கள் தற்போது அரசுப் பேருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பல அரசுப் பேருந்துகள் ஏற்கனவே மஞ்சள் நிறத்திற்கு மாறி வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிற மாற்றத்தைக் கண்டு இணையவாசிகள் எக்ஸ் தளத்தில் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்தால் அரசு அலுவலகங்கள், பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் இதேபோன்று மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களுக்கு மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in