VIDEOS
விஜயின் கன்னத்தை கிள்ளிய ரசிகர்…. பதறிப்போய் விஜய் செய்த செயல்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளதாகவும் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் நேற்று பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்தார். விஜயின் வருகை குறித்து முன்னரே அறிந்த ரசிகர்கள் அங்கு கூடினர். அங்கு மீட்டிங் முடிந்தவுடன் விஜய் வீட்டிற்கு காரில் புறப்பட்டார். செல்லும் வழியில் அவரைப் பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ரசிகர்களுக்கு காரிலிருந்து விஜய் கையசைத்தார். அப்போது ரசிகர் ஒருவர் விஜயின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டார். உடனே பதறிப் போய் விஜய் கார் கண்ணாடியை மூடிய நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
