தமிழா தமிழா: உங்க தங்கச்சிய இப்படி பண்ணா ஏத்துப்பீங்களா…? மேடையில் முறைப்பையனை கதறவிட்ட நடுவரின் அதிரடி கேள்வி.. அதிர்ந்துபோன அரங்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழா தமிழா: உங்க தங்கச்சிய இப்படி பண்ணா ஏத்துப்பீங்களா…? மேடையில் முறைப்பையனை கதறவிட்ட நடுவரின் அதிரடி கேள்வி.. அதிர்ந்துபோன அரங்கம்..!!

Published

on

பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’ போன்ற விவாத நிகழ்ச்சிகளைப் போலவே, மற்றொரு முன்னணி தொலைக்காட்சியில் ‘தமிழா தமிழா’ என்ற ரியாலிட்டி விவாத நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், சமுதாயத்தில் உள்ள பல்வேறு சுவாரசியமான தலைப்புகள் மற்றும் பிரச்சினைகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடில் “முறைப்பையன் மற்றும் முறைப்பெண்” என்ற சுவாரசியமான தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பல முறைப்பையன்கள், நீண்ட வருடங்களுக்குப் பிறகு தங்களது முறைப்பெண்களைச் சந்தித்த நெகிழ்ச்சியான தருணங்களையும், சுவாரசியமான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு அங்கிருந்தவர்களைச் சிரிக்க வைத்தனர்.

Advertisement

விவாதத்தின் போது ஒரு வாலிபர், தான் ஏற்கனவே வேறொரு பெண்ணைக் காதலித்து வரும் நிலையிலும், தனது முறைப்பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகக் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சியின் நடுவர், அதுவரை சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவர் சட்டெனக் கோபமடைந்து, “நாளைக்கு உங்க தங்கச்சியை யாராவது இந்த மாதிரி பண்ணினால் ஏத்துப்பீங்களா?” என்று அந்த இளைஞரைப் பார்த்துக் காரசாரமாகக் கேள்வி எழுப்பிக் கொந்தளித்தார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in