“வி தி லீடர்ஸ்” அமைப்பின் அடுத்த கட்டம்…! அண்ணாமலையின் அதிரடி பிளான்… ஜூலை 19-ல் நடக்கவிருக்கும் மெகா சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வி தி லீடர்ஸ்” அமைப்பின் அடுத்த கட்டம்…! அண்ணாமலையின் அதிரடி பிளான்… ஜூலை 19-ல் நடக்கவிருக்கும் மெகா சம்பவம்…!!

Published

on

பா.ஜ.க-விலிருந்து விலகிய அண்ணாமலை தொடங்கியுள்ள “வி தி லீடர்ஸ்” அமைப்பை விரைவில் ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் நெல்லையில் தெரிவித்துள்ளார். தற்பொழுது 18 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பில், அதன் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டும்போது முழுமையான கட்சியாக மாற்றப்பட்டு, எதிர்காலத்தில் உள்ளாட்சி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், போதை கலாச்சாரத்திற்கு எதிராக ஜூலை 19-ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவுள்ளார். இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை அமைச்சர்களாக்கியுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் சில திட்டங்களை இந்த அமைப்பு வரவேற்றாலும், த.வெ.க-விற்கும் திராவிடக் கட்சிகளுக்கும் இடையே பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை எனப் பிரபாகரன் விமர்சித்துள்ளார். தங்களது புதிய கட்சியில் நிரந்தரமான எம்.எல்.ஏ அல்லது எம்.பி என்று யாரும் இருக்க மாட்டார்கள் என்றும், புதிய முகங்களுக்கும் இளைஞர்களுக்கும் மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அண்ணாமலை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in