LATEST NEWS
“எனக்கு மசாஜ் செய்வதாக சொல்லி” என் 5 பவுன் நகையை திருடிவிட்டார்.. பிரபல யுடியூபர் மதுமிதா மீது 89 வயது தொழிலதிபர் பரபரப்பு புகார்..!!
நாகர்கோவில் தம்மத்துக்கோணத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் மதுமிதா மீது காவல் துறையினர் திடீரெனத் திருட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இவரது வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இவர் மீதே திருட்டுப் புகார் பதிவாகியுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 89 வயது முதியவரான ஒரு தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், பிசியோதெரபிஸ்ட் மற்றும் மசாஜ் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த மதுமிதா, தன்னை மசாஜ் செய்வதற்காக அழைத்தபோது, தனது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டதாக அந்த முதியவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நகை திருட்டு குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் சமூக வலைதளங்களில் அவமானப்படுத்தி அசிங்கப்படுத்துவேன் என்று மதுமிதா தமக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அந்த முதியவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக ராஜாக்கமங்கலம் காவல் நிலைய போலீசார் மதுமிதா மீது திருட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும், இந்தத் திருட்டுச் சம்பவம் திருநெல்வேலி (நெல்லை) பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படுவதால், இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட மேல் நடவடிக்கை மற்றும் விரிவான விசாரணைக்காக, வழக்கை நெல்லை மாவட்டக் காவல் துறைக்கு மாற்றும் பணிகளை போலீசார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
