‘குட் நைட்’ மணிகண்டனுக்கு ஜோடியாக களமிறங்கும் விஜய் டிவி டிடி… இது ஒரு காதல் கதையா இருக்குமோ?… வெளியான வீடியோ… - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘குட் நைட்’ மணிகண்டனுக்கு ஜோடியாக களமிறங்கும் விஜய் டிவி டிடி… இது ஒரு காதல் கதையா இருக்குமோ?… வெளியான வீடியோ…

Published

on

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் தொகுப்பாளினி டிடி.  விஜய் டிவியில் ஒளிபரப்படும் பெரிய பெரிய நிகழ்ச்சி என்றவுடன் முதல் அழைப்பு டிடிக்கு தான் என்ற அளவுக்கு பிஸியாக இருந்தவர். அவர் வந்தாலே அந்த மேடை கலகலப்பாக இருக்கும். விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

தற்பொழுது சின்னத் திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் டிடி என்ற திவ்யதர்ஷினி. தற்பொழுது இவர் வழக்கம் போல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்லை. இதற்கு காரணம் அவரது காலில் ஏற்பட்ட பிரச்சனை என்று கூறப்படுகிறது. முன்னணி  நட்சத்திரங்களின் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மட்டுமே தற்பொழுது தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisement

தற்பொழுது டிடி ‘மத்தகம்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, (குட் நைட் )மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘மத்தகம்’. இந்த தொடர் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெப்தொடரில் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த வெப்தொடரை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்த வெப் சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘மத்தகம்’ வெப்தொடரின் டீசர் வெளியாகி வைரலானது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்த சீரிஸின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் என்பதை அழகாக எடுத்துரைத்தது. தற்பொழுது இந்த  வெப் சீரிஸ்  ரிலீசாவதற்கு 1 நாளே உள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் மற்றொரு டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.  இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Disney+ Hotstar Tamil (@disneyplushotstartamil)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in