VIDEOS
என்ன விஜய் சார் இதெல்லாம்?…. பெற்றெடுத்த அம்மாவுக்கு இவ்வளவு தான் மரியாதையா?…. வீடியோவை பார்த்து கொந்தளித்த நெட்டிசன்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்தத் திரைப்படத்தை வம்சி இயக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்க இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சரத்குமார், குஷ்பூ மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன்தினம் படு பிரம்மாண்டமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அதில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் விஜயின் தந்தையும் தாயும் கலந்து கொண்டு தங்களின் மகனின் படம் வெற்றி பெறும் என்று வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவின் அரங்கிற்குள் வரும்போது விஜய் அனைவருக்கும் கை கொடுத்து வந்தார். அதனைப் போலவே தன்னுடைய பெற்றோரிடம் அவர் நடந்து கொண்டார். அந்த வீடியோவில் தனது மகன் தன்னிடம் பேசாமல் செல்கிறாரே என்று ஷோபா சந்திரசேகர் ஏங்கி நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பெற்றெடுத்த அம்மாவுக்கு இவ்வளவுதான் மரியாதையா என்று கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
https://twitter.com/DarbarThalaivar/status/1606688413448810496
