வாரிசு இசை வெளியீட்டு விழாவில் போலீசை தாக்கிய விஜய் ரசிகர்கள்…. ஷாக் கொடுக்கும் வீடியோ…. !!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் போலீசை தாக்கிய விஜய் ரசிகர்கள்…. ஷாக் கொடுக்கும் வீடியோ…. !!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்தத் திரைப்படத்தை வம்சி இயக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்க இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சரத்குமார், குஷ்பூ மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் வாரிசு படத்தின்  ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

அதில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நுழைவாயிலில் ரசிகர்கள் பலரும் குவிந்திருந்தனர் . நுழைவாயிலில் இருந்த சில காவல்துறை அதிகாரிகளை விஜய் ரசிகர்கள் தாக்கியுள்ள வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு தான் இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் காவல்துறையினரிடம் ரசிகர்கள் இப்படி நடந்து கொண்டது தவறு என கண்டித்து பலரும் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

https://twitter.com/Thalapa31619161/status/1606602710060797952

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in