LATEST NEWS
வாணி போஜனா இது என்று ரசிகர்கள் வியக்கும் அளவிற்கு பச்சை சேலையில் புகைப்படத்தை வெளியிட்டார்..!
சன் டிவி தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன். சின்னத்திரை நடிகை மட்டுமல்லாமல் மாடலிங் துறையிலும் இவர் பணியாற்றி வருகிறார். முதலில் விஜய் டிவியல் ஒளிபரப்பான ஆஹா என்ற தொடரில் தான் இவர் அறிமுகமானாராம். தற்பொழுது ஓ மை கடவுளே என்ற திரைப்படம் படப்பிடிப்பில் உள்ளது. திரைப்படத்தில் மீரா என்னும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
2014 முதல் 2018 வரை சன் குடும்ப விருதுகள் தொடர்பாக சிறந்த நடிகைக்கான விருதினை இவர் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் தற்போது இவருக்கு வந்து கொண்டிருக்கிறதாம். இந்நிலையில் அடுத்ததாக முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் அவர்களும் இணைந்து நடிக்கப் போவதாக சில செய்திகள் வெளியாகின.
வாணி போஜன் என்றாலே கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் மிக ஆர்வத்துடனும் அவரின் பக்கத்தை தேடுவார்கள். ஆனால் தற்போதோ ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு புடவையை அணிந்து கொண்டு செல்பீஸ் சை எடுத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார். ரசிகர்களோ நம்ம வாணி போஜனா இது என்று வாயை பிளக்கும் அளவிற்கு மிக அழகாகவும் க்யூட்டாகவும் இருக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள்.
