LATEST NEWS
இந்த நடிகருக்காக உருவாக்கப்பட்டது தான் கைதி படமா? நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!
நடிகர் கார்த்தி ஆரம்பத்தில் மணி ரத்னத்தில் உதவி இயக்குநராக சேர்ந்தார். பின்னர் கார்த்தி தமிழில் பருதிவீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். கார்த்தி தனது திரைப்பட வாழ்க்கையைத் தவிர, சமூக நலச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளார், அவர் திறந்து வைத்த சமூக நலக் கழகமான “மக்கள் நல மன்றம் ” மூலம் ரசிகர்களையும் இதேபோல் செய்ய ஊக்குவித்தார். இவர் நடிகர் சங்கத்தின் பொருளாளர் ஆவார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் திரையுலகில் பெரிய அளவில் வளர்ந்து வரும் ஒரு இயக்குனர்.
மாநகரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளியில் வெளியான திரைப்படம் கைதி. இப்படம் நடிகர் விஜய் பிகில் திரைப்படத்துடன் வெளியாகியும் பிளாக் பஸ்டர் ஆனது. மேலும் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர், இதில் மாலவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஜெரேமியா, சாந்தனு பாக்யராஜ் மற்றும் ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் கைதி திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் மனதில் வைத்து தான் அந்த கதாபாத்திரத்தை எழுதியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால் தயாரிப்பாளர் வேண்டுகோளின் படி நடிகர் கார்த்தியை வைத்து இயக்கியுள்ளார்.
