LATEST NEWS
நடிகை நயன்தாராவைப் போலவே அச்சு அசலாக இருக்கும் பெண்.. இணையத்தில் வைரலாகும் டிக் டாக் வீடியோ..
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெரிதளவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரே நடிகை நயன்தாரா. இவர் தமிழில் அய்யா திரைப்படம் மூலம் அறிமுகமானார். நயன்தாரா பிரபல நடிகர்களான விஜய், அஜித், ரஜினி மற்றும் சூர்யா என பலருடன் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக தமிழில் நடித்து வெளிவந்த படம் தர்பார். மேலும் தற்போது மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் ஐந்து ஃபிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றுள்ளார். ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தில் நடித்ததற்காக பெரும்பாலான விருதுகளைப் பெற்றார். அவர் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் ,இவர் ஒவ்வொரு படத்திற்கும் 6 கோடி.
சமீபத்தில் இந்திய, சீனாவின் சில App- களை தடைசெய்து விட்டது. அதில் டிக் டாக் எனும் App- ம் ஒன்று. இந்நிலையில் டிக் டாக் மூலம் தற்போது நடிகை நயன்தாராவை போல் அச்சு அசல் அப்படியே இருக்கும் பெண் ஒருவர் நயன்தாராவின் வசனத்தை டிக் டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..
View this post on Instagram
