தங்கப் பதக்கம் வென்ற 20 நாட்களில் துயரம்… ஆற்றில் குளிக்கச் சென்ற 13 வயது சிறுவனுக்கு காத்திருந்த மரணம்… கதறியழும் பெற்றோர்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

தங்கப் பதக்கம் வென்ற 20 நாட்களில் துயரம்… ஆற்றில் குளிக்கச் சென்ற 13 வயது சிறுவனுக்கு காத்திருந்த மரணம்… கதறியழும் பெற்றோர்கள்..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் உள்ள ரென் நதியில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி, தேசிய அளவிலான டயக்வாண்டோ வீரன் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கதிஹார் பகுதியைச் சேர்ந்த 13 வயதான கோபால கிருஷ்ணா என்ற சிறுவன், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி டேராடூனில் நடைபெற்ற தேசிய அளவிலான டயக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த சில நாட்களிலேயே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

தசரா விடுமுறையைக் கொண்டாடுவதற்காக கோபால கிருஷ்ணா மற்றும் அவனது அண்ணன் கிருஷ்ணா கோபால் (14) ஆகிய இருவரும் சத்தீஸ்கரில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தனர். அப்போது, இவர்களது உறவினரான விவேக் சிங் என்பவர் தனது மகன் அபிஜித் சிங் மற்றும் இந்த இரு சிறுவர்களுடன் ரென் நதியில் குளிக்கச் சென்றுள்ளார். ஆழமான பகுதிக்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நான்கு பேரும் ஆற்றுத் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Advertisement

உயிரிழந்த சிறுவர்களின் தந்தை சாகர் சிங் என்பவரும் தேசிய அளவிலான பளுதூக்கும் (Weight Lifting) வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்கள் உட்பட 4 பேர் நதியில் மூழ்கிப் பலியான இச்சம்பவம், அவர்களது குடும்பத்தினரையும் கதிஹார் விளையாட்டு உலகினரையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in