LATEST NEWS
திடீரென சம்பளத்தை 2 மடங்கு உயர்த்திய அனுஷ்கா.. எவ்வளவு தெரியுமா?… காரணம் இதுதானா.. வியக்கும் திரையுலகம்..!!
கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் தெலுங்கில் முதலில் அறிமுகமாகி அதன் பிறகு தன்னுடைய அழகாகும் திறமையாலும் ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் விஜய் உடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் மற்றும் அஜித்துடன் என்னை அறிந்தால் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடியாக நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார். அதன் பிறகு அனுஷ்கா பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த நிலையில் அந்த படத்திற்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்காவுக்கு அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் போனதால் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இவர் இறுதியாக 2020 ஆம் ஆண்டு நிசப்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது மூன்று வருட இடைவேளைக்கு பிறகு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலு செட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்த மாதம் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அனுஷ்காவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில் அனுஷ்கா தன்னுடைய சம்பளத்தை திடீரென ஆறு கோடி உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை மூன்று கோடி சம்பளம் வாங்கி வந்த அனுஷ்கா தற்போது தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது திரையுலகினர் மத்தியில் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
