CINEMA
பட வாய்ப்பே இல்ல… தனி ரூட்டை கையில் எடுத்து லட்சம் லட்சமாய் சம்பாதிக்கும் ஹனிரோஸ்… வாயடைத்துப் போகும் திரையுலகம்..!!

தமிழில் முதல் கனவு என்ற திரைப்படத்தில் மலையாள நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஹனி ரோஸ். அதன் பிறகு இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்த இவர் இறுதியாக நடிகர் ஜெய் மற்றும் சுந்தர் சி நடிப்பில் வெளியான பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
இந்நிலையில் பட வாய்ப்புகள் இவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை என்றாலும் தன்னுடைய கவர்ச்சியால் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். பல வணிக நிறுவனங்கள் மற்றும் கடை திறப்பு விழாக்களில் அதிக அளவு கலந்து கொள்கிறார். கேரளாவில் ஒட்டுமொத்த தொழிலதிபர்களின் பார்வையும் இவர் மீது தான் உள்ளது. கடை திறப்பு விழாவுக்கு கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு வரும் இவரை பார்ப்பதற்காக மிகப்பெரிய கூட்டம் வருவதால் அவருக்கு தற்போது இதுவே பிசினஸ் ஆக மாறிவிட்டது.
ஒரு படத்தில் நடிப்பதால் கிடைக்கும் சம்பளத்தை விட இப்படி கடை திறப்பு விழாவுக்கு சென்று அதிக அளவு சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் ஆந்திராவில் ஒரு ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இவர் கலந்து கொண்ட நிலையில் அதற்கு 50 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக செய்தி வெளியானது. ஆந்திராவிற்கு மட்டும்தான் இந்த ரேட் பேசி உள்ளார். அதுவே தன்னுடைய சொந்த மாநிலமான கேரளாவில் அதைவிட கம்மி ரேட் என தொழில் அதிபர்களிடம் லட்சக்கணக்கில் டீல் பேசி ஹனி ரோஸ் சம்பாதித்து வருகின்றார்.