LATEST NEWS
காதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜாலியாக சைக்கிளிங் சென்ற நடிகர் அஜித்… ‘வாழ்ந்தா இவரை போல வாழனும்’… வைரலாகும் புகைப்படங்கள்…
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘துணிவு’.
இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். சமீபத்தில் நடிகர் அஜித் நார்வே நாட்டில் அவருடைய நண்பர்களுடன் இணைந்து பைக்கில் சுற்றிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகின.
இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் அஜித் தற்பொழுது சென்னைக்கு திரும்பி வந்துள்ளார்.
இதனால் விரைவில் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
#AK latest
Last la oru Paiyankitta “Don’t go the corner” #AjithKumarpic.twitter.com/eSKdmoHctK
— Prakash Mahadevan (@PrakashMahadev) August 26, 2023
தற்போது அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.
சென்னையில் பள்ளிக் குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங் செய்தபோது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.
#Ajithkumar sir , Treating Each and Everyone with same respect! #VidaaMuyarchi pic.twitter.com/m6uoF4O4DY
— Ajith KumarFan (@thala_speaks) August 26, 2023
அஜித்தோடு அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் சைக்கிளிங் செய்துள்ளனர். சைக்கிளிங் சென்றபோது அஜித் அவரது காதல் மனைவி ஷாலினியுடன் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Great Saturday for AK fam #Ajithkumar | #Vidaamuyarchi pic.twitter.com/1Scq4p31U8
— Trollywood (@TrollywoodX) August 26, 2023
