CINEMA
‘பாய்ஸ்’ பட நடிகை ஜெனிலியா கணவருடன் பண்ற சேட்டையை பாத்தீங்களா?… கியூட் ஜோடியின் லேட்டஸ்ட் வீடியோ…

இயக்குனர் சங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. ஹிந்தி, கன்னடம் ,தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஹிந்தியில் தனது முதல் படத்தில் தனது ஜோடியாக நடித்த நடிகர் ரித்தேஷ்முக்கை காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார்.
தற்பொழுது இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்தை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக திரையுலகை விட்டுவிலகி குடும்பத்தை கவனித்துக் கொண்டு இருந்தார் நடிகை ஜெனிலியா. தற்பொழுது குழந்தைகள் வளர்ந்து விட்டதால் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஜெனிலியா. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுது இவர் தனது கணவருடன் சேட்டை செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் அழகிய ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram