CINEMA
‘கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடா’… 4-வது திருமணநாளை குடும்பத்தோடு கொண்டாடிய பிக் பாஸ் அனிதா…

பிரபல தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக அறியப்பட்ட அனிதா சம்பத், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆரம்பத்தில் அனிதாவிற்கு சப்போர்ட் செய்த பலரும் நாட்கள் செல்ல, செல்ல அவரை சோசியல் மீடியாவில் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
அப்படி ஒவ்வொரு முறை மீம்ஸ், ட்ரோல் என அனிதாவை விமர்சித்த அனைவருக்கும் நெத்தியடி பதிலடி கொடுத்து வந்தார் காதல் கணவர் பிரபா. கிட்டதட்ட 80 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அனிதாவும், தன்னுடைய கணவன் பிரபாவைப் பற்றியும், தங்களுக்கிடையேயான காதல் பற்றியும் பேசாத நாளே கிடையாது.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அனிதா சம்பத். இவர் அவ்வப்பொழுது தனது வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்தவகையில் நேற்று அனிதா தனது 4 -வது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்ய ரசிகர்களும் அவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.இதோ அந்த வீடியோ…
View this post on Instagram