ஓணம் ஸ்பெஷல்… மகளுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்ட நடிகை கௌதமி… அம்மா யாரு மகள் யாருன்னே தெரியலையே… - Cinefeeds
Connect with us

CINEMA

ஓணம் ஸ்பெஷல்… மகளுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்ட நடிகை கௌதமி… அம்மா யாரு மகள் யாருன்னே தெரியலையே… 

Published

on

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து  பிரபலமானவர் நடிகை கௌதமி. இவர் 1983ல் ‘வசந்தமே வருக’ படத்தின் மூலம் துணை நடிகையாக தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து 1987 ல் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மாறினார். இவருக்கு திருப்புமுனையாக  அமைந்தது ‘குரு சிஷ்யன்’ திரைப்படம்.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இவர் நடித்தார். இப்படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.இப்படத்தை தொடர்ந்து எங்க ஊரு காவல்காரன், ரத்த தானம், நம்ம ஊரு நாயகன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்தார். அதே போல இவருக்கு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்தன.

இவர் சந்திப் பார்த்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார். ஆனால் திருமணம் ஆன ஒரு சில வருடங்களில் சந்திப் பார்த்தியாவிடமிருந்து விவாகரத்து பெற்று பிறந்தார். மகள் சுப்புலட்சுமியுடன் தனியாகவே வாழ்ந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் கமலஹாசன் 10 ஆண்டுகள் வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.

ஒரு சில காரணங்களுக்காகவும் மகளின் வருங்காலம் கருதியும் கமலஹாசனை விட்டு விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கௌதமி அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கௌதமி தனது மகள் சுப்புலட்சுமியுடன் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Gautami Tadimalla (@gautamitads)