LATEST NEWS
FLASH: தவெக MLA-வுக்கு மிரட்டல்.. கட்சி மாற கோடிகளில் பேரம் பேசிய யூடியூபர் திருநாவுக்கரசு அதிரடி கைது..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை, மாற்று கட்சிக்கு மாறுமாறு வற்புறுத்தி, தொடர்ந்து மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் பிரபல யூடியூபர் IPDS திருநாவுக்கரசு சென்னை காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம், அவர் கட்சி மாற வேண்டும் என்பதற்காகப் பெருந்தொகை பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ இளையராஜா அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் தீவிரப் புலனாய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக திருநாவுக்கரசை சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக அவரது மனைவி தரப்பில் புகார் எழுந்த நிலையில், அவர் முறையான விசாரணைக்குப் பின் சட்டப்படியே கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது
