LATEST NEWS
இரவோடு இரவாக தூக்குங்க… செந்தில் பாலாஜியை கைது செய்ய தீவிரம்… விடாமல் துரத்தும் தவெக..!!
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் ஒரு வழக்கில், செந்தில் பாலாஜியை நேற்று இரவே கைது செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த திடீர் கைது உத்தரவு செய்தி வெளியானதன் காரணமாக, கரூரில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக அனுப்பப்பட்ட சம்மனின் அடிப்படையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும்.
ஒருவேளை அவர்கள் இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராகத் தவறினால், அவர்களைக் கைது செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீவிரமாக முடுக்கிவிட காவல்துறை முழு தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
